|
‘வில்லு’ படப்பிடிப்பு: பாங்காக்கில் மனோபாலா கைது
Oct 11,2008 00:00
by
admin
விஜய், நயன்தாரா நடிக்கும் 'வில்லு' படத்தின் ஷ¨ட்டிங் பாங்காக்கில் உள்ள பட்டையா தீவில் நடந்து வருகிறது. வடிவேலு, மனோபாலா நடித்த காமெடி காட்சிகளை பிரபு தேவா இயக்கி வந்தார். காட்சிப்படி தீவிரவாதியான மனோபாலா, நீண்ட முடி மற்றும் துப்பாக்கிகளுடன் ஸ்டண்ட் நடிகர் ஒருவருடன் பைக்கில் அமர்ந்து செல்வார். அவரை போலீஸ் துரத்துவது போல படமானது. ஷ¨ட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, பைக்கை அவர் வேகமாக ஓட்டியதாக தெரிகிறது. இதை கேமரா மூலம் அறிந்த அங்கிருந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அவர்களை விரட்டினர்.
தகவல் அறிந்து இயக்குனர் பிரபு தேவா, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், படக் குழுவ¤னர் காவல் நிலையத்துக்கு சென்று போலீசாருடன் பேசினர். 'ஷ¨ட்டிங்கிற்காக வந்துள்ளோம். இனி இது போல தவறு நடக்காது' என பிரபுதேவா எழுதி தந்ததையடுத்து மனோ பாலாவை போலீசார் விடுவித்தனர். |