|
ஜூனியர் சூப்பர் ஸ்டார்னு சொல்லாதீங்க
Sep 02,2008 00:00
by
admin
இதுபற்றி அவர் கூறியதாவது: 'யாரடி நீ மோகினி', 'பொல்லாதவன்' என 2 ட் கொடுத்தபிறகு மிக கவனமாக இருக்கிறேன். இந்த வெற்றிக்கு பிறகு, முழுக்க முழுக்க ஒரு மசாலா படத்தைதான் என்னிடம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டேன். சினிமா ஹீரோவுக்கான முழுதகுதி இல்லாவிட்டாலும் என்னை மக்கள் ஏற்றுக்கொண்டதற்கு காரணம், பக்கத்து வீட்டு பையனைப்போன்ற தோற்றம் உடையவனாக இருப்பதுதான். இதை வைத்து நீண்ட நாள் ஓட்ட முடியாது என்பது தெரியும். அடுத்து வெளிவரும் 'படிக்காதவன்' காமெடி கலந்த கதை. தமிழ் திரையுலகில் 6 பேக் எனப்படும் உடற்கட்டு தோற்றத்தை முதலில் அறிமுகம் செய்தது நான்தான் என்பதில் பெருமை. 'பொல்லாதவன்' படத்திற்காக இத்தோற்றத்துக்கு மாறினேன். இப்போது சூர்யா, விஷால் என எல்லா ஹீரோக்களும் பின்பற்றுகிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினியின் மருமகனாக இருந்தாலும் என்னை 'ஜூனியர் சூப்பர் ஸ்டார்' என்று சொல்வதை ஏற்பதில்லை. அதற்கு நான் நீண்ட பயணம் செய்ய வேண்டும். படம் இயக்க வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாட்களாகவே இருக்கிறது. 2010 வரை கால்ஷீட் கொடுத்திருப்பதால் இப்போதைக்கு இயக்க முடியாது. அதன்பிறகு நிச்சயம் |