ஹீரோயின் ஆனார் சரண்யா மோகன்
Aug 27,2008 00:00 by admin

 

தங்கை கேரக்டரில் நடித்து வந்த சரண்யா மோகன் பஞ்சாமிர்தம் படம் மூலம் ஹீரோயின் ஆனார்.
‘ஒரு நாள் ஒரு கனவு’, ‘யாரடி நீ மோகினி’ ஆகிய படங்களில் தங்கையாக நடித்தவர் சரண்யா மோகன்.

இவர், அபிராமி ராமநாதன் தயாரிக்கும் ‘பஞ்சாமிர்தம்’ படம் மூலம் ஹீரோயின் ஆனார்.

இது குறித்து சரண்யா கூறியதாவது:

தமிழில் ஒரு நாள் ஒரு கனவு படத்தில் ஸ்ரீகாந்த் தங்கையாக நடித்தேன். என் நடிப்பை பார்த்து பட வாய்ப்புகள் வந்தன. எல்லா படங்களையும் ஒப்புக்கொள்ளவில்லை. யாரடி நீ மோகினி படத்தில் அந்த கேரக்டர் நன்றாக இருந்ததால் நடித்தேன்.

அந்தப் படத்தில் தனுஷ§டன் நான் ஆடும் ‘பாலகாட்டு பக்கத்துல...’ பாடல் பிரபலமானது. இதை பார்த்து பஞ்சாமிர்தம் டைரக்டர் ராஜூ ஈஸ்வரன் நடிக்க கேட்டார். ஒப்புக்கொண்டேன்.

இந்தப் படத்தில் என் கேரக்டர் வித்தியாசமானது. கிளாமராக நடிக்க மாட்டேன்.