|
நடித்ததற்கு சம்பளம் தரவில்லை - நவ்யா நாயர்
Aug 25,2008 00:00
by
admin
'ராமன் தேடிய சீதை' படத்தில் நடித்ததற்கு மோசர்பேர் நிறுவனம் தனக்கு சம்பளமே தரவில்லை என புகார் கூறினார் நவ்யா நாயர். கேரளாவில் படப்பிடிப்பில் இருந்த நவ்யா நாயர் அளித்த பேட்டி: 'அவள் பெயர் தமிழரசி' படத்தில் நடிக்க மோசர்பேர் நிறுவனம் என்னை ஒப்பந்தம் செய்தது. இதனால் அதே நிறுவனம் தயாரித்த 'ராமன் தேடிய சீதை' படத்தில் சம்பளம் வாங்காமல் கவுரவ வேடத்தில் நடித்தேன். 'அவள் பெயர் தமிழரசி' படத்துக்கு நான் கொடுத்த கால்ஷீட்டை பயன்படுத்தாமல் தவறவிட்டனர். இதனால் அப்படத்திலிருந்து விலகிக்கொண்டேன். இதனால் 'ராமன் தேடிய சீதை'யில் நடித்ததற்கு நியாயமாக அவர்களாகவே எனக்கு சம்பளம் தர வேண்டும். ஆனால் இதுவரை தரவில்லை. இப்படத்தின் பாடல் கேசட் ரிலீஸ் விழாவுக்கு நான் வரவில்லை. இதற்கு காரணம் படத்தில் பெரிய வேடம் இல்லை என்பதால்தான். ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தில் நடிக்காதது எனக்கு வருத்தம் கிடையாது. கைவசம் பல படங்கள் உள்ளன. தமிழ், மலையாளம் தவிர கன்னடத்திலும் நடித்து வருகிறேன். இவ்வாறு நவ்யா நாயர் கூறினார். 'ராமன் தேடிய சீதை படத்துக்கு நவ்யா நாயர் சம்பளம் வாங்கவில்லை என்று கூறுவது அதிர்ச்சி அளிப்பதாக மோசர்பேர் நிறுவன அதிகாரி தெரிவித்தார். ‘‘ராமன் தேடிய சீதை படத்தில் நடித்த தனக்கு மோசர்பேர் நிறுவனம் சம்பளம் தரவில்லை என்று கூறி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இப்படத்தில் 4 நாட்கள் அவர் நடித்தார். அதற்காக ரூ.5 லட்சம் சம்பளம் கொடுத்தோம். அதைப் பெற்றுக்கொண்டு சம்பளமே தரவில்லை என்று கூறியிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறதுÕ என்றார் மோசர்பேர் நிறுவன அதிகாரி தனஞ்செயன்.
|