ரஹ்மான் இசையில் பாடுகிறார் த்ரிஷா
Aug 21,2008 00:00 by admin

 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடுகிறேன் என்று த்ரிஷா கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:

தமிழில் ‘அபியும் நானும்’ படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனது முழு நடிப்பு திறமையையும் அந்த படத்தில் காட்டியிருக்கிறேன். எனது இன்னொரு முகத்தை காட்டும் படமாக அது இருக்கும்.

தெலுங்கில் ‘கிங்’ என்ற படத்தில் தொலைக்காட்சி பாடகியாக நடித்து வருகிறேன். பொதுவாக நன்றாக பாடுவேன். அதனால் எளிதாக நடிக்க முடிகிறது. மற்றவர்கள் முன்னால் பாட, வெட்கப்பட்டுக்கொண்டு எனது பாட்டு திறமையை வெளிப்படுத்தவே இல்லை. ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர ரசிகை நான். அவர் இசையில் விரைவில் பாட இருக்கிறேன்.

இவ்வாறு த்ரிஷா கூறினார்.