முன்னணி நடிகைகளின் டார்ச்சரால் புதுமுகங்களுக்கு வாய்ப்பு: சுந்தர்.சி
Aug 18,2008 00:00 by admin

 

முன்னணி நடிகைகளின் டார்ச்சர் தாங்க முடியாததால் புது நடிகைகளுக்கு வாய்ப்பளிப்பதாக சுந்தர்.சி கூறினார்.

ஜி.கிச்சா தயாரிப்பில் சுந்தர்.சி, ராகிணி நடித்துள்ள படம் ‘தீ’. இதன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

தெலுங்கில் வெற்றிபெற்ற ‘ஆக்ஷன் துரியோதனா’ படத்தின் ரீமேக்தான் ‘தீ’. இதில் போலீஸ் அதிகாரி மற்றும் அரசியல்வாதி கேரக்டரில் நடித்திருக்கிறேன்.

நமீதா அரசியலுக்கு வரும் நடிகையாகவும், ராகிணி என் மனைவியாகவும் நடித்துள்ளனர். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சமூக அக்கறை வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் படம் இது.

எனது ஜோடியாக முன்னணி நடிகைகள் நடிப்பதில்லையே என்று கேட்கிறார்கள். எனக்கும் ஆசைதான். ஆனால் அவர்கள் கேட்கும் சம்பளம் மலைப்பாக இருக்கிறது. அவர்கள் தரும் டார்ச்சரும் தாங்க முடியவில்லை.

அதனால்தான் புது நடிகைகளை நடிக்க வைக்கிறோம். அவர்களும் எந்த பிரச்னையும் இல்லாமல் நடித்துக் கொடுக்கிறார்கள். நான் இயக்குனராக இருந்தபோதும் சரி, இப்போதும் சரி புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பதையே விரும்புகிறேன். விரைவில் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் ஒன்றை இயக்கி நடிக்க இருக்கிறேன்.

இவ்வாறு சுந்தர்.சி கூறினார். பேட்டியின் போது இயக்குனர் ஜி.கிச்சா, இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவாளர் ஷங்கர் மற்றும் ராகிணி உடன் இருந்தனர்.