கால் டாக்சி டிரைவராக நடிக்கிறார் அருண் விஜய்
Aug 18,2008 00:00 by admin

 

புதிய படத்தில் கால்டாக்சி டிரைவராக அருண் விஜய் நடிக்கிறார்.

இதுபற்றி நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

‘வேதா’ படத்துக்கு பிறகு பெரிய படத்தில் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதற்காகத்தான் இந்த இடைவெளி. அப்பா(விஜயகுமார்) தயாரிப்பில் நடிக்க இருக்கிறேன். அதற்கிடையில் இன்னொரு வாய்ப்பு வந்துள்ளது.

எனது வெளிநாட்டு நண்பர்களின் ‘சேனல்&9‘ நிறுவனமும், எனது மாமனார் டாக்டர் என்.எஸ்.மோகனும் இணைந்து தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன். இதற்கான கதை தேர்வு செய்யப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை பிரபாகர் திரைக்கதை அமைக்கிறார்.

இதில் கால் டாக்சி டிரைவராக நடிக்கிறேன். மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும் ஆக்ஷன் படம் இது. இதற்காக ஹாலிவுட் பயிற்சியாளர் ஒருவரிடம் கடந்த ஒரு மாதமாக ‘பார்குட்’ எனப்படும் மொட்டைமாடியில் தாவிகுதித்து ஓடும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். முன்னணி இயக்குனர் ஒருவர் இயக்கவும், முன்னணி ஹீரோயின் ஒருவர் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இவ்வாறு அருண் விஜய் கூறினார்.