|
கோட்-சூட் அணிந்தால்தான் பேட்டி
Aug 18,2008 00:00
by
admin
இந்தி நடிகர் பரேஷ் ராவல், கோட் சூட் அணிந்தால்தான் டி.வி.க்கு பேட்டி தருவேன் எனக் கூறி மல்லிகா ஷெராவத் அடம் பிடித்தார். இந்த சம்பவம், மும்பையில் இரு தினங்களுக்கு முன் நடந்தது. மல்லிகா ஷெராவத், ராஹ§ல் போஸ், பரேஷ் ராவல் நடித்துள்ள படம் 'மான்கயே முகல் ஏ ஆஸம்'. அப்பா வேடங்களில் நடிக்கும் பரேஷ் ராவல், இதில் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். படம் தொடர்பாக இப்படக் கலைஞர்கள் பேட்டி தரும் நிகழ்ச்சி, ஒரு டிவி சேனல் ஸ்டுடியோவில் நடந்தது. இதற்கு குர்தா, பைஜாமா அணிந்து பரேஷ் ராவல் வந்திருந்தார். அப்போது அங்கு வந்த மல்லிகா, பரேஷை கவனித்தார். உடனே நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரை அழைத்து காதில் ஏதோ கூறிவிட்டு, ஸ்டுடியோவிலிருந்து சென்று தனது காரில் அமர்ந்துகொண்டார். பரேஷ் ராவலிடம் தயங்கியபடி சென்ற அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், விஷயத்தை கூறினார். 'உங்க உடை மல்லிகாவுக்கு பிடிக்கல. நீங்க கோட் சூட் போட்டால்தான், அவர் பேட்டி தருவாராம். அவரோட பேட்டி ரொம்ப முக்கியம். ப்ளீஸ் சார், கோட் சூட் தர்றோம். அதை போட்டுக்குங்க' என்றார். கொதித்துப்போன பரேஷ், 'இது என்னங்க நியாயம்? நான் எந்த உடை போட்டிருந்தா அவருக்கு என்னவாம்' என¢றார். உடனே அங்கு வந்த தயாரிப்பாளர் ரத்தன் ஜெயின், பரேஷை சமாதானப்படுத்தி கோட் சூட் கொடுத்தார். பரேஷ் அதை அணிந்த பின்பே ஸ்டுடியோவுக்கு வந்தார் மல்லிகா. பின் இருவரும் சேர்ந்து டிவி நிகழ்ச்சிக்கு பேட்டி தந்தனர். மல்லிகாவின் இந்த நடவடிக்கை, நிகழ்ச்சி குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ரத்தன் கூறுகையில், 'இது இளைஞர்களுக்கான சேனல். இந்த படம் யூத்தான கதை. அதனால் பேட்டியின்போது கோட், சூட் அணிந்து பரேஷ் இளமையாக இருந்தால் நன்றாக இருக்கும் என மல்லிகா நினைத்தார். அது தவறில்லை' என்றார். |