|
விஜய்யுடன் மீண்டும் ஜோடியா?
Aug 15,2008 00:00
by
admin
மும்பையில் இருக்கும் அசின், நிருபரிடம் கூறியதாவது: ஆமிர்கான் ஜோடியாக நடிக்கும் இந்தி ‘கஜினி’யில், இரு பாடல் காட்சிகளில் நடிக்க வேண்டும். அடுத்து விபுல் ஷா இயக்கத்தில் சல்மான்கான், அஜய் தேவ்கன் நடிக்கும் ‘லண்டன் ட்ரீம்ஸ்’ படத்தில் ஹீரோயினாக நடிக்கிறேன். இப்படத்தின் ஷ¨ட்டிங் 45 நாட்கள் லண்டனில் நடக்கிறது. பிறகு பாரீஸ், பஞ்சாப், மும்பையில் நடக்கிறது. இதில் பங்கேற்க அடுத்த மாதம் 14&ம் தேதி லண்டன் செல்கிறேன். பரத் பாலா டைரக்ஷனில் கமல்ஹாசன் நடிக்கும் படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. மீண்டும் தமிழில் நடிக்க ஆசை. ஆனால், நான் எதிர்பார்க்கும் கேரக்டர் அமையவில்லை. தற்போது புதுப்படம் ஒன்றில் விஜய் ஜோடியாக நடிக்க கேட்டுள்ளனர். |