ஷாருக்குடன் மோதல் ஏன்? சல்மான் கான் விளக்கம்
Aug 10,2008 00:00 by admin

 

ஷாருக் கானுடன் மோதல் ஏற்பட்டது உண்மைதான் என்றார் சல்மான் கான்.

சல்மானின் காதலியும் நடிகையுமான கேத்ரினா கைப்பின் பிறந்த நாள் விழா சமீபத்தில் மும்பையில் நடந்தது. இதில் சல்மான் கான், ஷாருக் கான், ஆமிர் கான் உட்பட பலர¢ கலந்துகொண்டனர். விழாவில் போதை ஏறியதும் சல்மான், ஷாருக் இடையே மோதல் ஏற்பட்டது.

இவர்கள் இருவரும் தனித்தனியே டிவியில் கேம் ஷோ நடத்தி வருகிறார்கள். அது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இது குறித்து சல்மான் கான் கூறியதாவது: ஷாருக்குடன் சண்டை ஏற்பட்டது உண்மைதான். அப்போது என்ன நடந்தது என்பதை கூற முடியாது. ஆனால் எதற்காக மூன்றாவது முறையாக எங்களுக்குள் சண்டை நடந்தது என்பது மட்டும் எனக்கு புரிகிறது.

எங்கள் எண்ணங்கள், கருத்துகள், வழி என எல்லாமே வெவ்வேறாக உள்ளன. இதற்கு முன் இரு முறை சண்டை போட்டபின் மீண்டும் இணைந்துவிட்டோம். ஒவ்வொரு முறையும் நட்பாக இருக்கலாம் என நான் பார்ப்பேன். அது முடியாமல் போய்விடுகிறது. இனி நண்பர்களாக நாங்கள் இணைவது கடினம்தான்.

இவ்வாறு சல்மான் கான் கூறினார்.