|
மாடலிங்கைவிட நடிப்பு ஈஸி - த்ரிஷா
Jul 03,2008 00:00
by
admin
மாடலிங்கில் பூனை நடை நடப்பதைவிட நடிப்பு சுலபம் என்கிறார் த்ரிஷா. பேஷன் டிசைனர் சிட்னியின் ‘ஸ்பிரிங் சம்மர் 2008’ என்ற பேஷன் நிகழ்ச்சி சென்னையில் சில தினங்களுக்கு முன் நடந்தது. இதில் கலந்துகொண்டு மேடையில் நடந்து வந்தார் த்ரிஷா. இதுகுறித்து த்ரிஷா கூறியதாவது: பேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மேடையில் ஆடையை விளம்பரப்படுத்த நடந்து வந்தேன். இது சந்தோஷமான தருணமாக இருந்தது. காரணம், மாடலிங்கிலிருந்து சினிமாவுக்கு வந்தவள் நான். ஏழு ஆண்டுகளுக்கு பின் இது போல பேஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறேன். நீண்ட இடைவெளிக்கு பின் இந்நிகழ்ச்சியில் நடந்து வந்ததால், படபடப்பாக இருந்தது. எப்படியோ பூனை நடை நடந்துவிட்டேன். பழைய நினைவுகள் எல்லாம் கண் முன் வந்தது. நடிப்புடன் இந்த பேஷன் நடையை ஒப்பிட்டால், நடிப்புதான் எனக்கு சுலபம். இரண்டு பாடல் பாடிவிட்டு, ஹீரோவுடன் ரொமான்டிக் காட்சிகளில் நடிப்பது கஷ்டமாக இல்லை. ஆனால் பேஷன் நடைதான் கஷ்டம். இவ்வாறு த்ரிஷா கூறினார். |