|
"தமிழச்சியாகப் பிறக்கவில்லையே': நவ்யா நாயர் ஏக்கம்
Jun 29,2008 00:00
by
admin
கனடாவில் வசிக்கும் தமிழர் சுரேஷ் ஜோகிம். பல்வேறு துறைகளில் 53 முறை கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். அடுத்து 12 நாட்களில் ஒரு படத்தை தயாரித்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். இதில் சுரேஷ் ஜோகிம் ஜோடியாக நவ்யா நாயர் நடிக்கிறார். அதன் அறிமுக விழா நேற்றுமுன்தினம் சென்னையில் நடந்தது. அதில் நவ்யா நாயர் பேசும்போது, ‘‘நான் நடித்து சம்பளம் வாங்கும் போது அதைக் கொண்டு இடம் வாங்கிப்போடலாமா? கல்யாண மண்டபம் கட்டலாமா? என்றுதான் நினைத்தேன். ஆனால் சுர«ஷ் ஜோகிம் இப்படத்தின் மூலம் வரும் வருமானத்தில் 50 ஏழை குழந்தைகளுக்கு உதவுகிறார். அந்த எண்ணம்தான் இப்படத்தில் என்னை நடிக்க தூண்டியது. இனி நான் சம்பாதிக்கும் சம்பாத்தியத்தில் 25 சதவீதமாவது உதவிகள் செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.ஒரு தமிழர் இப்படிப்பட்ட சாதனைப் படத்தை எடுக்கிறார் என்பது மகிழ்ச்சியான விஷயம். இதைப் பார்க்கும்போது நான் தமிழச்சியாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன். இதையடுத்து, "தமிழச்சியாகப் பிறக்கவில்லையே என ஏங்கும் நீங்கள் ஒரு தமிழனைத் திருமணம் செய்துகொள்வீர்களா?' என்று செய்தியாளர்கள் கேட்டபோது... ""என் பெற்றோர் சம்மதித்தால் நிச்சயமாக ஒரு தமிழரைத் திருமணம் செய்துகொள்வேன். எப்படியிருந்தாலும் ஓர் இந்தியரைத்தான் மணமுடிப்பேன்'' என பதிலளித்தார். சுரேஷ் ஜோகிம் பேசும்போது, 'இங்கிலாந்தை சேர்ந்த ரஸ் மால்கின் தயாரித்து, ஜான் கோர் டைரக்டு செய்து 75 நிமிடம் ஓடக்கூடிய 'தி பாஸ்டஸ்ட் பார்வர்ட்' திரைப்படம் 13 நாட்களில் எடுக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைத்தது. அதை முறியடிக்கும் வகையில் இதை உருவாக்கு கிறேன். டிசம்பர் மாதம் பணி தொடங்கும். இதில் வசனங்கள் ஆங்கிலத்தில் இருக்கும். தேவா இசை அமைக்கிறார். பார்வையற்ற ஒருவர் பாடகராக அறிமுகமாகிறார். ஊனமுற்ற 50 குழந்தைகளை தத்து எடுக்கிறேன். அமலதாஸ் டைரக்ட் செய்கிறார். சவுந்திரராஜன், செல்வா.ஆர், இந்திரஜித் நெல்லை என 3 ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றுகின்றனர்' என்றார். |