நடிகை பாரதிக்கு திருமணம்: நடிப்புக்கு முழுக்கு
Jun 26,2008 00:00 by admin

 

வயசு பசங்க, யுகா, அம்முவாகிய நான், நெஞ்சத்தை கிள்ளாதே ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தவர் பாரதி. தற்போது சற்றுமுன் கிடைத்த தகவல் படத்தில் நடித்து வருகிறார்.


உறவினர் ஒருவரை திருமணம் செய்யப்போவதால் நடிப்புக்கு முழுக்குப் போடவுள்ளார். அதனால் அவருக்கு வந்த புதுப்பட வாய்ப்புகளை நிராகரித்து விட்டார். அவருக்கும் உறவினர் ஒருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதால் சினிமாவை விட்டு விலகுவதாக அப்பட நிறுவனங்களிடம் பாரதி சொல்லி இருக்கிறார்.


இது குறித்து பாரதி தரப்பில் விசாரித்தபோது, பாரதிக்கு திருமண தேதி இன்னும் முடிவாகாததால் வெளியே சொல்லவில்லை. மணமகன் நெருங்கிய உறவினர். திருமணத்திற்கு பிறகு பாரதி சினிமாவில் நடிக்க மாட்டார் என்று கூறினர்.