பணிப் பெண் விவகாரம்: அஸினிடம் மும்பையில் விசாரணை
Jun 26,2008 00:00 by admin

 

 மும்பையில் உள்ள நடிகை அஸினிடம் சென்னை போலீஸôர் நேரில் விசாரணை நடத்தினர்.

தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நரசம்மா. இவரது மகள் பியூலா. இவர் அஸினிடம் பணிபுரிந்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு அஸின் வீட்டு வேலைக்குச் சென்ற தனது மகளைக் காணவில்லை என்று நரசம்மா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

 

 

விசாரணையில் நடிகர் ஆமீர் கான் நடித்து வரும் "கஜினி' படத்தில் அஸின் நடித்து வருவது தெரியவந்தது. மும்பையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் உதவியாக இருப்பதற்காக பியூலாவை அழைத்துச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அஸின், மும்பை அந்தேரி காவல் நிலையத்தில் ஆஜராகி "பியூலா தன்னுடன்தான் உள்ளார். அவரை எவ்வித தொந்தரவும் செய்யவில்லை' என்று கூறினார்.

அதேபோல "நான் அஸினுக்கு உதவியாக உள்ளேன். என் விருப்பத்தின் பேரிலேயே அஸினுடன் தங்கியிருக்கிறேன். என் தாய் கூறுவது போல என்னை யாரும் வீட்டில் அடைத்து வைத்து தொந்தரவு செய்யவில்லை' என்று பியூலாவும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் குற்ற வழக்கு தொடர்பாக மும்பைக்கு விசாரணைக்கு சென்ற தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜான் அருமைராஜ், அந்தேரியில் உள்ள காவல் நிலையத்தில் அஸினை நேரில் விசாரித்தார். அவருடன் பியூலாவும் இருந்தார்.

அச் சமயத்தில், இன்னும் 10 நாள்களுக்குள் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராகும்படி அஸினை கேட்டுக் கொண்டார் என்று போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக துணை கமிஷனர் மௌரியா கூறுகையில், "குற்ற வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த போலீஸôர் மும்பை சென்றுள்ளனர். பணிப் பெண் விவகாரம் தொடர்பாக அஸினிடமும் விசாரணை நடத்தும்படி தெரிவித்திருந்தேன். அதன்படி விசாரணை நடந்தது' என்றார்.