இந்தியில் நடிக்க ஸ்ருதிக்கு அமிர் சிபாரிசு
Jun 26,2008 00:00 by admin

 

இந்தி படத்தில் நடிக்க ஸ்ருதி கமல்ஹாசனை சிபாரிசு செய்திருக்கிறார் அமிர் கான்.

கமல் மகள் ஸ்ருதி, மாதவன் ஜோடியாக தமிழ்ப் படத்தில் அறிமுகமாக இருந்தார். ஆனால் திடீரென அப்படத்தில் நடிக்க அவர் மறுத்துவிட்டார். இதனால் படம் கைவிடப்பட்டது. இந்தியில் அமிர்கானின் உறவினர் இம்ரான்கான் நடிக்க வந்துள்ளார்.

சோஹம் இயக்கும் 'லக்' படத்தில் இம்ரான் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக புதுமுகம் ஒருவரைத் தேடி வந்தனர். அப்போது ஆங்கில இதழில் ஸ்ருதியின் புகைப்படங்களை பார்த்த அமிர், சோஹமிடம் ஸ்ருதி பெயரை சிபாரிசு செய்திருக்கிறார்.

ஆனால் படத்தின் தயாரிப்பாளருக்கோ இயக்குனருக்கோ கமல்ஹாசனுடன் தொடர்பில்லை. இதனால் அமிரே கமலிடம் போனில் பேசியிருக்கிறார். 'இம்ரான் ஜோடியாக உங்கள் மகளை நடிக்க வையுங்கள். இந்த படம் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகிறது.

உங்கள் மகளுக்கு இந்த படத்தால் புகழ் கிடைப்பது, எனது பொறுப்பு' என உறுதி தந்துள்ளார் அமிர். இதையடுத்து ஸ்ருதியை 'லக்' படத்தில் நடிக்க வைக்க சம்மதித்துள்ளார் கமல்.