கார்த்தீகை படத்திலிருந்து மாளவிகா நீக்கம்
Jun 26,2008 00:00 by admin

 

திருமணத்துக்கு முன் மாளவிகா நடிக்க ஒப்புக்கொண்ட படம் 'கார்த்தீகை'.

 பின்னர் தொழில் அதிபர் சுமேஷை மணந்தார். இப்போது 5 மாத கர்ப்பமாக இருக்கும் மாளவிகா, ஐதராபாத்தில் நடக்கும் 'கார்த்தீகை' படப்பிடிப்பில் பங்கேற்க வந்தார்.

அப்போது தயாரிப்பாளர் அவரிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மாளவிகா, படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை. மும்பை சென்றுவிட்டார்.

'தயாரிப்பாளர் ஆஞ்சநேயலு, தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாகவும், கடினமான நடன அசைவுகள் தந்து கஷ்டப்படுத்தினர்' எனவும் நடிகர் சங்கத்தில் புகார் கூறினார்.

 இப்போது 'கார்த்தீகை' படத்திலிருந்து மாளவிகாவை நீக்கியுள்ளனர். இது குறித்து இயக்குனர் வீரா கூறுகையில், 'மாளவிகாவை நீக்கிவிட்டோம். அவருக்கு பதிலாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கிறார். நஷ்டத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்திய அவர் மீது ரூ. 75 லட்சம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடருவோம்' என்றார்.