|
விஜய் ரசிகர் மன்ற கொடி நாளை அறிமுகம்
Jun 21,2008 00:00
by
admin
நடிகர் விஜய் ஜூன் 22-ம் தேதி தன்னுடைய 34-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பிரமாண்டமான விழா நடைபெறுகிறது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 1500-க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளும் ஏராளமான ரசிகர்களும் கலந்துகொள்கிறார்கள். விஜய் மன்றங்களுக்கென சில கொடிகளை ஆங்காங்கே ரசிகர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இருப்பினும், தன்னுடைய ரசிகர் மன்றங்களுக்கென அதிகாரப்பூர்வ சின்னம் பொறித்த கொடியை இந்த விழாவில் விஜய் அறிமுகப்படுத்துகிறார். பிறந்த நாள் விழாவில் ரசிகர் மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இன்னிசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலில் ரசிகர் மன்றம்; தற்போது கொடி; அடுத்து..?
|