|
பொய் சொல்லப்போறோம் படத்துக்கு விளம்பர பாடல்
Jun 21,2008 00:00
by
admin
'பொய் சொல்லப்போறோம்' படத்துக்கு விளம்பர பாடல் படமாக்கப்பட்டுள்ளது. பிரியதர்ஷன் முதன்முறையாக தமிழில் தயாரிக்கும் படம் 'பொய் சொல்லப்போறோம்'. 'கிரீடம்' விஜய் இயக்கியுள்ளார். 'கண்ட நாள் முதல்' கார்த்திக், பியா, நாசர், மவுலி, நெடுமுடி வேணு நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஜூலை முதல் வாரத்தில் ஆடியோ ரிலீசாகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படத்துக்காக விளம்பர பாடல் படமாக்கப்பட்டுள்ளது. இப்பாடல் படத்தில் இடம்பெறாது. படத்தின் கதைக் களத்தை கூறுவது போன்று பாடல் இருக்கும். ஆங்கில, இந்தி படங்களுக்கு இதுபோன்ற விளம்பர பாடலை படமாக்கி வருகிறார்கள். தமிழில் 'சுப்ரமணியபுரம்' படத்துக்கும் இது போல பாடலை படமாக்கியுள்ளனர். இதுகுறித்து இயக்குனர் விஜய் கூறுகையில், 'விளம்பர பாடலில் கதையின் சாரம்சம் இடம்பெறும். நா. முத்துக்குமார் எழுதியுள்ளார். எம்.ஜி.ஸ்ரீகுமார் இசையில் ஜெஸி கிஃப்ட் பாடியிருக்கிறார். காயத்ரி ரகுராம் நடனம் அமைத்திருக்கும் முதல் பாடல் இது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் படம் வெளியாகிறது' என்றார். |