கடோத்கஜன் (அனிமேஷன்) - விமர்சனம்
May 23,2008 00:00 by admin

 

தயாரிப்பு : ஷெமாரூ எண்டர்டெயின்மென்ட் லிட் மற்றும்
சன் அனிமேஷன்

இயக்கம் : சிங்கீதம் சீனிவாசராவ்.

இசை : பிரவீன்மணி.

விமர்சனம்

  பீமனின் மகனான கடோத்கஜன் மாவீரன். மாயாஜால வித்தைக்காரன்.
அர்ஜுனனின் மகனும், தனது தம்பியுமான அபிமன்யூ காதலுக்கு பிரச்னை
வருகிறது. தன் வீரத்தாலும், மாயாஜால வித்தையாலும் கடோத்கஜன்
காதலர்களை எப்படி சேர்த்து வைக்கிறான் என்பது கதை.

பச்சிளம் குழந்தையாக தொட்டிலில் படுத்திருக்கும்போதே தன்னை கடத்த
வந்தவர்களை பந்தாடுவது, 5 வயதில் கடலுக்கு அடியில் உள்ள தங்க முத்தை
கொண்டு வருவது என்று அவனது சாகசங்கள் தொடர்கிறது.

பிறகு விருமாண்டி மீசையுடன் வளர்ந்த பிறகு தம்பியின் காதல் பிரச்னை
கேள்விப்பட, அவர்கள் காதலை நிறைவேற்ற கடோத்கஜனின் சாகசங்கள்
மீண்டும் தொடர்கிறது.

ஒவ்வொரு காட்சியும் நகைச்சுவை ததும்ப வடிவமைக்கப்பட்டிருப்பது தனி
சிறப்பு. கடோத்கஜன் நண்பனான குட்டியானை செய்யும் அட்டகாசங்கள்
குழந்தைகளை குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறது.

கண்ணன் கதை சொல்லும் பாடலும், காட்சிகளும் அருமை. அடர்ந்த
காடுகள், பெரிய அரண்மனைகள், ஆழ்கடல் என்று ஒவ்வொரு காட்சியும்
பிரமிக்க வைக்கிறது. நாமும் அங்கு செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துவதில்
அனிமேஷன் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு தெரிகிறது.

அனிமேஷன் படம் என்றாலும் இசைக்கும், பாடல்களுக்கும் முக்கியத்துவம்
கொடுத்திருக்கிறார்கள். கடோத்கஜனை குழந்தைகளுக்கு பிடிக்கும்.