|
உண்ணாவிரதப் பந்தலில் ரஜினி - புகைப்படங்கள் இணைப்பு
Apr 04,2008 00:00
by
admin
ஒகேனக்கல் விவகாரத்தில் கர்நாடகத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் தமிழ் நடிகர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை 8 மணிக்கு சேப்பாக்கத்தில் துவங்கியது. நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், சத்யராஜ், விஜயகுமார், டி.ராஜேந்தர், தனுஷ், பார்த்தீபன், மாதவன், ராமராஜன், அர்ஜுன், பிரகாஷ்ராஜ், முரளி, மோகன், கார்த்திக், பிரசாந்த், பாண்டியராஜன், செந்தில், ரமேஷ் கண்ணா, தியாகு, வையாபுரி, கஞ்சா கருப்பு, பாஸ்கர், ஆதிராஜ், சார்லி, ஆர்யா, ஜீவா, நரேன், மன்சூர் அலிகான், அருண், பல்லவராஜன் உள்ளிட்ட நடிகர்களும், நடிகைகள் மனோரமா, மஞ்சுளா, ஸ்ரீபிரியா, லதா, சினேகா, சரண்யா, கீர்த்தி சாவ்லா, தேஜாஸ்ரீ, சரசுவதி, சத்யப்ரியா, விந்தியா, பாபிலோனா, ஷாம்லி உள்ளிட்ட நடிகைகளும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.
மேலும் ஏராளமான நடிகர், நடிகைகள் உண்ணாவிரதத்தில் பங்கேற்க சேப்பாக்கத்துக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
இந்த உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு நிறைவடையும். 




முன்னதாக உண்ணாவிரதத்தில் ரஜினிகாந்த் கலந்துகொள்வாரா என அனைத்து தரப்பிலும் கேள்வி எழுந்தது. எனினும் ரஜினிகாந்த் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வார் என அவரது சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று காலை உண்ணாவிரதப் பந்தலுக்கு ரஜினி வந்ததும் அவரது ரசிகர்கள் உற்சாக கோஷமெழுப்பினர். உண்ணாவிரதப் பந்தலின் முதல் வரிசையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் ரஜினி. உண்ணாவிரதத்தையொட்டி சென்னை சேப்பாக்கம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
|