|
'கிரீடம்' விஜய்யின் 'பொய் சொல்லப் போறோம்'
Mar 18,2008 00:00
by
admin
'கிரீடம்' விஜய் இயக்கும் படத்தில் ஜீவா ஹீரோவாக நடிக்கிறார். அஜீத், த்ரிஷா நடித்த 'கிரீடம்' படத்தை இயக்கியவர் விஜய். இவர் தற்போது பிரியதர்ஷன் தயாரிக்கும் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்துக்கு 'பொய் சொல்லப்போறோம்' என தலைப்பு வைத்துள்ளனர். இதையடுத்து ஜீவா நடிக்கும் படத்தை இயக்குகிறார். ஜெமினி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இதுகுறித்து விஜய் கூறியதாவது: 'பொய் சொல்லப்போறோம்' படத¢தை வேகமாக இயக்கி முடித்துள்ளேன். 'கண்ட நாள் முதல்' கார்த்திக், ப்ரியா, நாசர், மவுலி, வி.எம்.சி. ஹனீபா நடித்துள்ளனர். 'மைக்கேல் மதன காமராஜன்', 'அவ¢வை சண்முகி' போன்ற படங்களைப் போல காமெடி படமிது. காட்சிகள் சீரியசாக தெரியும். ஆனால் ரசிகர்கள் சிரித்துக் கொண்டிருப்பார்கள். மென்மையான காதலும் பாசமும் கதையின் பின்னணியில் இருக¢கும். ஸ்ரீகுமார் இசையமைத்துள்ளார். ஏப்ரல் 25&ம் தேதி திரையிட திட்டமிட்டுள்ளோம். இதையடுத்து ஜெமினி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்குகிறேன். இதில் ஜீவா ஹீரோ. கல்லூரி கதையிது. இளமை பொலிவுடன் படம் இருக்கும். உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு முக்கியத்துவம் தரும் படமாக இருக்கும். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
|