நடிகர் குணால் தற்கொலை
Feb 07,2008 00:00 by admin

 

நடிகர் குணால் மும்பை அந்தேரியிலுள்ள தனது இல்லத்தில்
இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பாலிவுட்டில் முதலில் அறிமுகமான குணால் தமிழில் காதலர் தினம்,
புன்னகை தேசம், சிம்ரனின் தங்கை மோனலுடன் (இவரும் தற்கொலை செய்து
கொண்டார் என்பது நினைவுகூறத்தக்கது) பார்வை ஒன்றே போதுமே,
பேசாத கண்ணும் பேசுமே, நண்பனின் காதலி, வருஷமெல்லாம் வசந்தம்,
உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் 
கடைசியாக அவர் நடித்த படம் நண்பனின் காதலி.

அவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். குணாலின்
தந்தை ராணுவத்தில் அதிகாரியாக உள்ளார்.

தற்கொலை செய்துகொள்வதற்கான காரணத்தை குணால் குறிப்பிடவில்லை.
எனினும் கடந்த சில நாட்களாக அவர் மிகுந்த மன உளைச்சலுடன்
காணப்பட்டார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளது.

திருமணத்தில் சிக்கல் ஏற்பட்டதால் அவர் தற்கொலை செய்திருக்கக் கூடும்
என்று கூறப்படுகிறது.

காதலர் தினம் படத்திற்குப் பின்னர் அவர் நடித்த எந்தப் படமும் ஹிட்
ஆகவில்லை. இதனால் பெரிய ஹீரோவாக முடியாமல் போனதால் பெரும்
வருத்தத்தில் இருந்தார் குணால். கடந்த சில மாதங்களாகவே அவர்
கடும் டிப்ரஷனில் இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குணால் மரணத்திற்கு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன்,
இயக்குநர் கதிர், தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி ஆகியோர் இரங்கல்
தெரிவித்துள்ளனர்.