|
'ஒரு சில கூட்டணி தப்பு பண்ணாது!' - த்ரிஷா
Dec 24,2007 00:00
by
admin
எத்தனை நாளாச்சு த்ரிஷாவைப் பார்த்து! புன்சிரிப்பும் பூங்கொத்தும் எப்போதும் அழகுதானே! ''ஹாய்சார்... கொஞ்சம் பிஸி!'' கொஞ்சலுடன் வந்து அமர்கிறது பொண்ணு. பொங்கலுக்கு நிச்சயம் 'பீமா' ரிலீஸ். அடுத்து விஜய்யுடன் குத்தாட்டக் 'குருவி', பிரகாஷ்ராஜ் காம்பி னேஷனில் கவிதையாக 'அபியும் நானும்' என த்ரிஷாவின் புது வருஷம் தமிழ்நாட்டுக்குதான்! ''ரெயின்போ மட்டும் இருக்கிறது ஒரு டைம். அழுத்தமா ரெயின் கொட்டுறது இன்னொரு டைம். நான் இப்போ அடுத்த கட்டத்தில் இருக்கேன். சும்மா டூயட், குத்து டான்ஸ், லவ் டயலாக்னு என்னை முடிச்சுக்க விரும்பலை. அதுவும் பண்ணணும்... அப்பப்போ இதயத்தைத் தொடுறமாதிரி அழகழகாவும் செய்யணும்!'' எண்ணூர் துறை முகத்தில், தலை கலைத்து விளையாடும் காற்றுக்கு நடுவே, சில்லென்று சிரிக்கிறார் த்ரிஷா! ''ஆனாலும், நீங்க ரொம்ப மோசம்! அதிகமா தெலுங்கு தேசத்திலேயே இருக்கீங்களே, நியாயமா?'' ''தமிழ்ல நான் நல்ல கதைகளை எதிர்பார்க்கிறேன். பணம்தான் முக்கியம்னா, நிறையப் படங்கள் செய்திருக்கலாம்தான். இடையில் சும்மா தெலுங்குக்குப் போனேன். அங்கே அவ்வளவு கிளாமர் ஹீரோயின்ஸ் இருக்காங்க. ஆனாலும், என்னை அவ்வளவு பிரியமா ஏத்துக்கிட்டாங்க. அதான் சீக்கிரம் திரும்பி வர முடியலை. அதுக்காக, நம்ம தமிழை விட்டுட முடியுமா? விக்ரம், விஜய்னு வரிசையா வர்றேன் பாருங்க!''
''எப்பவும் மெலிதான கிளாமரில் கலக்குவீங்க. இப்போ பார்த்தா, பிரகாஷ்ராஜோடு 'அபியும் நானும்'னு மேக்கப்பே இல்லாம... ஆச்சர்யமா இருக்கே?'' ''எனக்கு 'மொழி' பிடிச்சுது. ஜோதிகாவைப் பாருங்க. அவங்களும் என்னை மாதிரியே நடிச்சுட்டு இருந்தாங்க. திடீர்னு ஒரு படத்தில்... எவ்வளவு அழகான மாறுதல். அப்படி நானும் வெரைட்டி செய்ய ஆசைப்பட்டேன். பிரகாஷ்ராஜ் என் நண்பர். ஒருநாளும் என்னை நடிக்கக் கூப்பிட்டதில்லை. அப்படிப்பட்டவர், 'ராதாமோகன் ஒரு கதை வெச்சிருக்கார். உன் பிஸி எனக்குத் தெரியும். கதைகேட்டுட்டுச் சொல்லு'ன்னார். கேட்டேன்... அழகா, மனசை அள்ளிக்கிற கதை. 'நடிக்கிறேன்'னு சொல்லிட்டேன். பிரகாஷ§க்கு நன்றி சொல்லணும். நன்றியை நேரில் சொல்ல வராது. விகடன்லயே சொல்லிடுறேன்... தேங்க் யூ பிரகாஷ்!''
''நமீதா, நயன்தாரா எல்லாம் கிளாமரில் கொடி கட்டும்போது, நீங்க கதைப் படங்களில் நடிக்க ஆரம்பிச்சிட்டீங்க?'' ''என்னால் ஒரு அளவுக்கு மேலே கிளாமர் பண்ண முடியாதுங்க. 'பில்லா'வில் அவங்க இரண்டு பேரையும் விஷ்ணு பிரமாதமா எடுத்திருக்கார்னு தோணுது. அதிலும் நயன்தாரா சூப்பர்..! காஸ்ட்யூம் அவங்களுக்குப் பொருந்துகிற மாதிரி யாருக்கும் பொருந்தாது.
இருந்தாலும், எல்லாமே ஒரு கட்டத்தில் மாறணும். இந்த விஷயத்தில் சிம்ரன்தான் அழகான உதாரணம். அவங்க கிளாமர், ரசிக்க வைக்கிற மாதிரி இருக் கும். 'ஆல் தோட்ட பூபதி'யெல்லாம் ஆடிட்டு, 'கன்னத்தில் முத்தமிட்டால்' மாதிரி ஒரு படம் செய்ய முடிஞ்சது பாருங்க... தட்ஸ் க்யூட்!'' ''ஆறு வருடங்களில் இரண்டு டஜன் ஹீரோக்களு டன் நடிச்சிருக்கீங்க. உங்களுக்கு மிகச் சிறந்த ஜோடி யார்?'' ''அடடா, வம்புல மாட்டிவிட வந்திருக்கீங்க போல!ஆனாலும், கேட்டாச்சு இல்லையா... நிஜம் சொல்றேன். விஜய், விக்ரம் ரெண்டு பேரும்எனக்குப் பொருத்தமான, பிடிச்ச ஜோடின்னு சொல்லலாம். விக்ரமோடு ஜோடி சேரும்போது ஒரு தனி கெமிஸ்ட்ரி இருக்கும். 'சாமி'யில் ஆரம்பிச்ச விஷயம் 'பீமா' வரைக்கும் அதே கெமிஸ்ட்ரிஇருக்கு. விஜய்யோடு சேர்ந்தால், நம்மளோட ரேஞ்சே வேற. அந்த டான்ஸ், துறுதுறுப்பு, விறுவிறுப்பு, ஸ்டைல்எனக்கும் பத்திக்கும். எனக்குக் கச்சிதமான ஜோடின்னு நினைக்கிறது இவங்க ரெண்டு பேரையும்தான்!''
''அப்போ... உங்களுக்குப் பிடிச்ச, அழகான ஆண் அஜீத்னு சொன்னீங்களே, அது..?'' ''இப்பவும்... எப்பவும் அதேதான் சொல்வேன். 'கிரீடம்'ல 'அக்கம்பக்கம் யாருமில்லை' பாடலைப் பாருங்க, தெரியும். அந்த அழகுஇனி எங்கே வரும் சொல்லுங்க? அதிகம் தொடக்கூட மாட்டோம். நெருங்குவது கூடக் குறைவுதான். ஆனா, அவ்வளவு ரொமான்ஸ் இருந்ததுக்குக் காரணம், அஜீத்!''
''முன்னாடி மாதவன், சித்தார்த் நடிச்சா, கதை கேட்காமல் கால்ஷீட் கொடுப்பேன்னு சொன்னீங்க?'' ''அவங்க என் ப்ரெண்ட்ஸ். ஒரு உற்சாகத்தில் அப்படிச் சொல்லியிருப்பேன். கதை கேட்காமல் நடிச்சா, அவ்வளவுதான்... நம்ம கதை காலி! வெளியே புதுசு புதுசா பெண்கள் வந்துட்டே இருக்காங்க. ஒரு தப்பான மூவ் கொடுத்தாலும், அதைத் திருத்திக்க ரொம்ப டைம், ஆகிடும். அந்த இடைவெளியில் நம்ம இடம் இருக்குமான்னே சந்தேகமாயிடும்.
ஆனாலும், சிலரை நம்பியாகணும். டைரக்டர் தரணி எனக்கு 'குருவி'க்காகச் சொன்னது சின்ன அவுட் லைன். 'கில்லி'யில் என்னை பெரிய உயரத்துக்கு ஏத்திவிட்டவர்... உடனே சரின்னு சொல்லிட்டேன். சில கூட்டணி தப்பு பண்ணவே பண்ணாது. அதில் ஒண்ணு... விஜய் தரணி த்ரிஷா!''
-விகடன்- |