header Home | Set as homepage | Add to favorites |
Search the Site   Advanced Search »

Sections
Archive
Su Mo Tu We Th Fr Sa
1234
567891011
12131415161718
19202122232425
262728293031

Newsletter
Subscribe to newsletter:



email Email to a friend | print Print version | comment Comments (0 posted)

ஷங்கர் - ஷாருக் 'ரோபோ' மோதல்?

By on September 02,2008

image

 

'ரோபோ' பெயரில் 9 பட தலைப்புகளை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஷாருக்கான்.

'சிவாஜி' படம் முடிந்ததும் 'ரோபோ' படக் கதையை இந்தியில் படமாக்க திட்டமிட்டார் இயக்குனர் ஷங்கர். இந்த கதையை ஷாருக்கானிடம் கூறினார். படத்தை தனது ரெட் சில்லிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, நடிப்பதாக ஷாருக் கான் தெரிவித்தார்.

இதற்கிடையே கதை விவாதத்தின்போது ஏற்பட்ட பிரச்னையால் படத்திலிருந்து விலக ஷாருக் முடிவு செய்ததாகக் கூறப்பட்டது. ஆனால் இதை ஷங்கர் மறுத்தார். Ôஷாருக்கானுடன் பிரச்னை இல்லை.

சில காரணங்களால் 'ரோபோ'வில் அவர் நடிக்கவில்லை' என ஷங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 'ரோபோ' படத்தை ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடிப்பில் தமிழில் இயக்குகிறார் ஷங்கர்.

இதற்கிடையே கடந்த வாரம், மும்பையிலுள்ள மோஷன் பிக்சர்ஸ் அசோசியேஷன் மற்றும் டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அமைப்பில் ஷாருக்கின் ரெட் சில்லிஸ் நிறுவனம், மொத்தம் 9 தலைப்புகளை பதிவு செய்துள்ளது.  இந்த 9 தலைப்புகளுமே 'ரோபோ' பெயரில் பதிவாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரோபோ, ரோபோ எ ஹீரோ, மேரா ரோபோ, மெய்ன் ஹ¨ன் ரோபோ, ரோபோ மை ஹீரோ உட்பட 9 தலைப்புகளை ஷாருக் பதிவு செய்துள்ளார். ஷங்கரும் தனது படத்துக்கு 'ரோபோ' என தலைப்பு வைத்திருக்கிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பதால் இதை இந்தியிலும் டப்பிங் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.

ஷாருக், 'ரோபோ' தலைப்பை பதிவு செய்திருப்பதால் ஷங்கரின் இந்தி 'ரோபோ'வுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஷாருக் தயாரிக்கும் ‘ரோபோ’ காரணமாக  ஷங்கர்-ஷாருக் மோதல் குறித்தும் பாலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Your Ad Here

1571 times read

Did you enjoy this article?

1 2 3 4 5 Rating: 3.56Rating: 3.56Rating: 3.56Rating: 3.56 (total 9 votes)
comment Comments (0 posted)
Most Popular
Most Commented
Most E-mailed