header Home | Set as homepage | Add to favorites |
Search the Site   Advanced Search »

Sections
Archive
Su Mo Tu We Th Fr Sa
123456
78910111213
14151617181920
21222324252627
28293031

Newsletter
Subscribe to newsletter:



email Email to a friend | print Print version | comment Comments (0 posted)

'பத்து பத்து' - திரை விமர்சனம்

By on July 25,2008

image

 

நடிப்பு: தலைவாசல் விஜய்,சோனா, பத்மா, போஸ் வெங்கட்.

தயாரிப்பு: இந்தியன் டிரீம் மேக்கர்ஸ்

இயக்கம்: ஸத்யம்.

இசை: எல்.வி.கணேசன்.


  கடிகாரத்தில் சரியாக மணி பத்து பத்து. மர்ம மனிதனால் சினிமா டைரக்டர் தலைவாசல் விஜய் கொலை செய்யப்படுகிறார். கொலையாளியை போலீஸ் தேடுகிறது. இறந்த விஜய்யின் மனைவி சோனா, பெண் வக்கீல், ரவுடி, பிக்பாக்கெட் என சந்தேகப்படுபவர்களிடம் துருவி துருவி விசாரிக்கிறது போலீஸ். நிஜ கொலையாளி பிடிபட்டானா என்பதே கிளைமாக்ஸ்.

வழக்கமான கமர்ஷியல் பார்முலாவிலிருந்து விலகி நிற்கும் படம். த.விஜய் பிணத்தை சூட்கேசில் மடக்கி வைத்து கூவத்தில் வீசியெறியும் பெண் வக்கீல் பத்மாதான் கொலைகாரியோ என்று போலீசைப்போல் ரசிகர்களும் சந்தேகிக்கின்றனர்.

அவரில்லை என்று தெரிந்ததும் அடுத்த சந்தேகம் மனைவி சோனா மீது பாய்கிறது. அவரும் இல்லை என்று தெரிந்ததும் விஜய்யிடம் மோதிய திருடன், ரவுடி, சவ ஊர்வலத்தில் நடனம் ஆடுபவர் என சந்தேக பட்டியல் நீள்கிறது.

பரட்டை தலை திருடன், போஸ் வெங்கட்டிடம் பிக்பாக்கெட் அடித்துக்கொண்டு ஓட, அவரை வெங்கட் துரத்தும்போது இருவரின், டாம் அண்ட் ஜெர்ரி சேட்டைகள் வயிற்றை பதம் பார்க்கிறது.

ஒரு வழியாக தப்பிய திருடன், முகத்தில் சோப்புபோட்டு குளிப்பதை பார்க்கும் வெங்கட், அவன் எதிரில் சத்தமில்லாமல் போய் நின்று கைது செய்வதும் நகைச்சுவை சிதறல்.

சோனாவை எப்படியெல்லாம் கிளாமராக காட்ட முடியுமோ அப்படியெல்லாம் காட்டி இருக்கிறார்கள். வீட்டில் தங்கி இருக்கும் இளைஞனுடன் சல்லாபம் நடத்துவது ÔஏÕ ரகம்.

ஒரு வழியாக கொலைகாரனை அடையாளம் கண்டு அவனை போலீஸ் துரத்துவது இன்னொரு சடுகுடு. பக்கத்திலேயே நிற்கும் கொலைகாரனை கோட்டைவிடும் போலீஸ், வேறு ஆளை துரத்த தொடங்குவது காமெடி. Ôஅப்பாடா தப்பித்தோம்Õ என்று மோட்டார் சைக்கிளில் பறக்கும் கொலையாளி எதிரில் வரும் லாரியில் அடிபட்டு நடுரோட்டில் பிணமாவது ஷாக்.

3 வெற்றி படங்களை கொடுத்த டைரக்டரான தலைவாசல் விஜய், சிறிய வீட்டில் குடும்பம் நடத்துவதுபோல் காட்டுவது மைனஸ். எல்.வி.கணேசனின் இசை சுமார். புதிய பாணியில் கதை சொல்ல முயன்றிருக்கும் டைரக்டர் ஸத்யத்தை பாராட்டலாம்.

 

Your Ad Here

1264 times read

Did you enjoy this article?

1 2 3 4 5 Rating: 1.00 (total 4 votes)
comment Comments (0 posted)
Most Popular
Most Commented
Most E-mailed