header Home | Set as homepage | Add to favorites |
Search the Site   Advanced Search »

Sections
Archive
Su Mo Tu We Th Fr Sa
123456
78910111213
14151617181920
21222324252627
28293031

Newsletter
Subscribe to newsletter:



email Email to a friend | print Print version | comment Comments (0 posted)

'தித்திக்கும் இளமை'- திரை விமர்சனம்

By on June 08,2008

image

 

நடிப்பு: தினேஷ், பிரணவ், அல்தாரா, நிஷா.

தயாரிப்பு: சங்கை எஸ்.சுப்பிரமணியன்.

இயக்கம்: சந்திரமோகன்.

இசை: மனீஷ்.

 

  தங்கை நிஷாவுக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்கிறார்
பிரணவ். தோழிகளுடன் ஓட்டலுக்கு செல்லும் நிஷாவின் செல்போனை
சர்வர் ஒருவர் திருடி விற்கிறார். அதை வாங்கும் தினேஷ், நிஷா முகத்தை
மாஃபிங் முறையில் நிர்வாண போஸ் தரும் பெண்ணுடன் இணைத்து நண்பர்களுக்கு
அனுப்புகிறார்.

அதை அறிந்து அதிர்ச்சி அடையும் நிஷா தீக்குளித்து தற்கொலை செய்கிறார்.
தங்கையின் சாவுக்கு காரணமானவர்களை படுகொலை செய்கிறார் பிரணவ்.
சட்டத்தின் முன் கொலைகாரனாக நிற்கும் பிரணவுக்கு நீதிபதிகள் வழங்கும்
தண்டனையே கிளைமாக்ஸ்.

செல்போனில் ஆபாச படம் எடுப்பது தவறு என்பதைக் சொல்வதற்கு முன்,
எப்படியெல்லாம் ஆபாசத்தை காட்ட முடியுமோ அப்படியெல்லாம் காட்டி
விடுகிறார்கள். கோ எஜுகேஷன் மாணவ, மாணவிகள் லூட¢டியடிப்பதாக
காட்டுவது ஓவர்.

பணத்திற்காக தினேஷ் விபசாரத்தில் ஈடுபடுவது, தினேஷிடம் அல்தாரா
கற்பை பறிகொடுப்பது அபத்தம். தவறு செய்த மாணவர்களை எரித்துக்
கொல்லும் பிரணவ், சஸ்பென்சுக்கு துணை நிற்கிறார். குப்பை மேட்டிலும்,
குடோனிலும் ஒவ்வொருவரை எரித்துக் கொல்வது த்ரில். கொலைகளை
துப்பு துலக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்சூர் அலிகான், ஜால¤ டைப்.

குற்றவாளி கூண்டில் நிற்கும் பிரணவ் 'நான் செஞ்சது 3 கொலை இல்ல,
4 கொலை' என பயமுறுத்துகிறார். நடிப்பில் ஜஸ்ட் பாஸ் ஆகிறார். படம்
முழுவதும் கன்னிப் பிழைகள் நிறைய தென்பட்டாலும், நல்ல கருத்து
சொல்ல விரும்பியுள்ளார் இயக்குனர். அதை வக்கிரம் கலக்காமல்
சொல்லியிருக்கலாம். மனீஷ்.கே. இசையில் 'வணக்கம்னே..' கானா பாட்டு,
உதட்டோடு ஒட்டுகிறது.

 

Your Ad Here

708 times read

Did you enjoy this article?

1 2 3 4 5 Rating: 5.00Rating: 5.00Rating: 5.00Rating: 5.00Rating: 5.00 (total 1 votes)
comment Comments (0 posted)
Most Popular
Most Commented
Most E-mailed