header Home | Set as homepage | Add to favorites |
Search the Site   Advanced Search »

Sections
Archive
Su Mo Tu We Th Fr Sa
123456
78910111213
14151617181920
21222324252627
28293031

Newsletter
Subscribe to newsletter:



email Email to a friend | print Print version | comment Comments (0 posted)

'அரசாங்கம்' - திரைவிமர்சனம்

By on May 16,2008

image

 

 

 நடிப்பு: விஜயகாந்த், நவ்னீத் கவுர், ஷெரில் பிரின்டோ, பிஜு மேனன்.

தயாரிப்பு: எல்.கே.சுதீஷ்.

இயக்கம்: மாதேஷ்.

இசை: ஸ்ரீகாந்த் தேவா.

 

 

விமர்சனம்:

 

   இந்தியாவின் மூளையாக செயல்படும் விஞ்ஞானிகள், தொழில் அதிபர்கள் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். இந்த கொலையை மாணவர்கள், பால் வியாபாரி, இளம் பெண்கள் செய்கின்றனர். காரணம் புரியாமல் தவிக்கிறது போலீஸ். குற்றவாளியை கண்டுபிடிக்க மும்பையிலிருந்து உயர் போலீஸ் அதிகாரி பிஜுமேனன் வரவழைக்கப்படுகிறார். விமானத்தில் ஏறியவர் அங்கேயே மாயமாகிறார்.

இதனால் மேலும் அதிர்ச்சியில் உறையும் போலீஸ் துறை, பிஜுமேனன் மற்றும் கொலையாளி தலைவனை கண்டுபிடிக்கும் பொறுப்பை குற்றப் புலானாய்வுத் துறை அதிகாரியான விஜயகாந்திடம் ஒப்படைக்கிறது.

கொலை கும்பல் தலைவன் கனடாவில் இருப்பதை அறிந்து, அங்கு பறக்கிறார் விஜயகாந்த். ஒரு கூட்டம் அவரை தீர்த்துக்கட்ட முயல்கிறது. இதிலிருந்து அவர் தப்பித்தாரா? கொலையாளியை பிடித்தாரா? பிஜு மேனன் கதி என்ன என்பதை சொல்லி முடிக்கிறது படம்.

 அரசியல் சாயமும் பஞ்ச் பில்டப்புகளும் இல்லாத விஜயகாந்தின் சில படங்களின் பட்டியலில் இதையும் சேர்க்கலாம். வெளிநாடுகளின் துணையோடு தமிழகத்தை சேர்ந்த வில்லன், நம் நாட்டு விஞ்ஞானிகளை கொல்வதும் அதை தனியாளாகச் சென்று ஹீரோ தடுப்பதும் அதே விஜயகாந்தின் தீவிரவாத படங்கள் கதை. இருந்தாலும் திரைக்கதையை விர்ரென பறக்கவைத்திருக்கிறார் இயக்குனர்.

 சாதாரணமாக மக்களோடு மக்களாய் இருக்கும் கல்லூரி மாணவன், பட்டதாரி பெண், பால்காரன் ஆகியோரை கொலைகாரர்களாக காட்டும் டெக்னிக் புதிது. கொலைகார கூட்ட தலைவனும் பிஜுமேனன்தான் என காட்டும்போது ஷாக். மாயமான பிஜுவும், கொலையாளி பிஜுவும் வெவ்வேறு ஆள் என்ற உண்மை தெரிந்தபிறகு திரைக்கதை சதுராட்டம் களைகட்டுகிறது.

 கனடா விமான நிலையத்திற்கு வரும் விஜயகாந்த், தன்னை கொல்வதற்காக ஒரு கூட்டம் நிற்பதை கண்டு சாதுர்யமாக வாடகை காரில் எஸ்கேப் ஆவது, பாதாள அறையில் பன்றிகளுக்கு இறையாகாமல் தப்பிப்பது, காரில் டைம்பாம் இருப்பதை கவனித்து டைவ் செய்வது என ஆக்ஷன் காட்சிகளில் ஹீட். குடும்ப போட்டோவை காட்டியதும் வில¢லன் ராகுல் தேவ் திருந்துவது, சென்டிமென்ட் சலிப்பு. ஸ்ரீமனுடன் நடக்கும் சண்டைக் காட்சி, திணிப்பு.

ஆக்ஷன் காட்சிகளில் வழக்கம்போல ரிஸ்க் எடுத்திருக்கிறார் விஜயகாந்த். வயதை காட்டிக் கொடுக்கும் ஒப்பனை, அவரது கேரக்டருக்கு மைனஸ். விஜயகாந்தின் மனைவியாக வரும் நவ்னீத் கவுர் கிளைமாக்ஸில் உயிர் தியாகம் செய்து மனதில் இடம் பிடிக்கிறார். கனடா போலீஸாக வரும் ஷெரில் பிரின்டோ கவர்ச்சிக்குப் பயன்பட்டிருக்கிறார். ஏ.வெங்கடேஷின் ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்த் தேவாவின் இசை, ஓகே ரகம்.

Your Ad Here

997 times read

Did you enjoy this article?

1 2 3 4 5 Rating: 3.33Rating: 3.33Rating: 3.33Rating: 3.33 (total 9 votes)
comment Comments (0 posted)
Most Popular
Most Commented
Most E-mailed