தற்கொலைக்கு முயன்றார் என்ற தகவலை ரம்பா மறுத்தார்.
'உள்ளத்தை அள்ளித்தா', 'த்ரி ரோசஸ்' உட்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் ரம்பா. சமீபகாலமாக தெலுங்கு மற்றும், போஜ்புரி படங்களில் நடித்து வந்தார். பட வாய்ப்புகள் குறைந்ததையடுத்து டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்க தொடங்கினார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக செய்தி வந்தது.
இதுகுறித்து ரம்பாவிடம் கேட்டபோது கூறியதாவது: இந்த செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். வரலட்சுமி நோன்பு மற்றும் கிருஷ்ண ஜெயந்திக்கு நான் விரதம் இருந்தேன். மேலும் டயட் கடைப்பிடிப்பதால் உடல் நிலை சரியில்லாமல் இருந்தது.
கிருஷ்ண ஜெயந்தி அன்று பிரசாதம் மட்டுமே சாப்பிட்டேன். திடீரென்று தலை சுற்றி வாந்தி எடுத்தேன். அருகிலேயே விஜயா மருத்துவமனை இருந்ததால் அங்கு சிகிச்சைக்காக சென்றேன்.
செக்கப் முடிந்த பிறகு வீட்டுக்கு திரும்பிவிட்டேன். இவ்வளவுதான் நடந்தது. அதற்குள் தற்கொலைக்கு முயன்றேன் என்று செய்தி.
நான் ஏன் தற்கொலை செய்ய வேண்டும்?. எனக்கு பிடிக்காதவர்கள் இப்படி வதந்தி கிளப்புகிறார்களோ என்ற சந்தேகம் இருக்கிறது.