'யாரடி நீ மோகினி' படத்துக்கு பின் மீண்டும் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார் மித்ரன் ஜவஹர். ஜெமினி லேப் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார்.
இதுகுறித்து மித¢ரன் ஜவஹர் கூறியது:
ஜெமினி லேப் நிறுவனத்துக்கு தனுஷ் முன்பே கால்ஷீட் ஒதுக்கியிருந்தார். இப்படத்துக்கு இயக்குனரை தேடி வந்தனர். 'யாரடி நீ மோகினி' ஹிட்டுக்கு பிறகு மீண்டும் தனுஷ்ம் நானும் இணைந்தால் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளர் விரும்பினார்.
அதே போல இதில் இணைந்து பணியாற்றுகிறோம். படத்துக்கு தலைப்பு வைக்கவில்லை. இதில் தனுஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார்.
அவருக்கு ஜோடி ஸ்ரேயா. தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் முடிவாகவில்லை. படத்தில் கல்லூரி காட்ச¤கள் அதிகமா இருக்கும்.
இந்த காட்சிகளை விசாகப்பட்டினத்தில் உள்ள கல்லூரியில் படமாக்குகிறோம். அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்கும்.
இவ்வாறு மித்ரன் ஜவஹர் கூறினார்.