header Home | Set as homepage | Add to favorites |
Search the Site   Advanced Search »

Sections
Archive
Su Mo Tu We Th Fr Sa
123456
78910111213
14151617181920
21222324252627
28293031

Newsletter
Subscribe to newsletter:



email Email to a friend | print Print version | comment Comments (0 posted)

தெலுங்கிலும் குசேலன் தோல்வி

By on August 21,2008

image

 

'குசேலன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'கதாநாயகடு' படமும் தோல்வி அடைந்துள்ளதால், நஷ்ட ஈடு கோரி தெலுங்கு வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து, 'குசேலன்' படத்தை தயாரித்தன. இதில் ரஜினி கவுரவ வேடத்தில் நடித்தார். இதே படத்தை, 'கதாநாயகடு' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்தனர். கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து இப்படத்தை அஸ்வினி தத் தயாரித்தார்.

இந்தப் படத்தின் வினியோக உரிமையை ரூ.60 கோடிக்கு பிரமிட் சாய்மீரா நிறுவனம் பெற்றது. ஆந்திராவில் ராயலசீமா, விசாகப்பட்டினம், குண்டூர், மேற்கு ஆந்திரா ஆகிய பகுதிகளுக்கான உரிமையை ரூ.5.75 கோடிக்கு சில வினியோகஸ்தர்கள் பெற்றிருந்தனர்.

'குசேலன்' படத்தைப் போலவே, தெலுங்கில் வெளியான 'கதாநாயகடு' படமும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதனால் வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் 30 பேர் சென்னை வந்துள்ளனர். தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அவர்கள் போராடி வருகின்றனர்.

இது குறித்து ராயலசீமா ஏரியா வினியோகஸ்தரான சசிதர் ராஜு, சத்யா ஆகியோர் கூறியதாவது:

'கதாநாயகடு' படத்தை ரஜினிக்காக மட்டுமே நாங்கள் வாங்கினோம். பசுபதி வேடத்தில் தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு நடித்துள்ளார். அவரது படங்கள் ரூ.60 லட்சத்துக்குள்தான¢ வியாபாரமாகும். இது ரஜினி படம் என்று சொன்னதால்தான், ரூ.6 கோடிக்கு நாங்கள் வாங்கினோம். ஆந்திராவில் 300 தியேட்டர்களில் திரையிடப்பட்ட இப்படம் இப்போது 25 தியேட்டர்களில¢தான் ஓடுகிறது.

'பாபா' படத்துக்கு எங்களுக்கு 50 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டது. இந்தப் படத்தால் 80 சதவீதம் நஷ்டம் அடைந்துள்ளோம். 'பாபா' படத்துக்கு நாங்கள் கேட்காமலேயே ரஜினி எங்களுக்கு பணத்தை திருப்பி தந்தார். இப்போது அதைவிட பெரிய நஷ்டம் என்பதால், ரஜினி உதவுவார் என்று நினைத்துதான் சென்னை வந்தோம்.

சென்னைக்கு வந்து பத்து நாட்கள் ஆகிவிட்டன. தினமும் பிரமிட் சாய்மீரா அலுவலகத்துக்கு சென்று, நஷ்ட ஈடு கேட்டுக்கொண்டிருக்கிறோம். நேற்று சென்றபோது, 'உங்களுக்கு பணம் தரக்கூடாது என தெலுங்கு தயாரிப்பாளர் அஸ்வினி தத் கூறிவிட்டார். இனி ஒரு பைசா தர முடியாது' என பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் வணிகப் பிரிவு இயக்குனர் முகேஷ் மேத்தா கூறிவிட்டார்.

இந்தப் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்யவில்லை என்றால், எங்களால் ஆந்திராவுக்குத் திரும்பி போக முடியாது. சென்னை யிலேயே விஷம் குடித்து செத்துவிடுவோம். ரஜினிதான் எங்களுக்கு உதவ வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சித்தூர் மாவட்ட வினியோகஸ்தர் சுந்தரம் கூறும்போது, 'இப்படத்தை தெலுங்கில் விற்றதால் தயாரிப்பாளர்கள் பாலசந்தர், விஜயகுமார், அஸ்வினி தத்துக்கு ரூ.15 கோடிக்கு மேல் கிடைத்துள்ளது. ஆனால் எங்களது நஷ்டத்தை ஈடு கட்ட அவர்களுக்கு மனம் இல்லை.

'குசேலன்' நஷ்டம் குறித்து விவாதிக்க தமிழக தியேட்டர் அதிபர்கள் சென்னையில் நாளை கூட்டம் நடத்து கின்றனர். அதில் நாங்களும் பங்கேற்போம். இதில் எடுக்கும் முடிவை தயாரிப்பாளர்களும் பிரமிட் சாய்மீராவும் ஒப்புக்கொள்கிறார்களா என பார்ப்போம். இல்லையென்றால் பிரமிட் சாய்மீரா அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருப்போம்' என்றார்.

குண்டூர் மாவட்ட வினியோகஸ்தரான பிரசாத் கூறுகையில், 'ரஜினியை சந்திக்க நேரம் கேட்டோம். விரைவில் சொல்வதாக ரஜினி தரப்பில் தெரிவித்துள்ளனர். தியேட்டர்களுக்கு வாடகையாக ரூ.4 கோடி வரை செலுத்த வேண்டியுள்ளது' என்றார்.

Your Ad Here

893 times read

Did you enjoy this article?

1 2 3 4 5 Rating: 3.33Rating: 3.33Rating: 3.33Rating: 3.33 (total 3 votes)
comment Comments (0 posted)
Most Popular
Most Commented
Most E-mailed