'படிக்காதவன்' படத்துக்காக ரீமிக்ஸ் பாடலை தேடி வருகிறோம் என்றார் இயக்குனர் சுராஜ்.
தனுஷ், தமன்னா நடிக்கும் படம் 'படிக்காதவன்'.
படம் குறித்து சுராஜ் கூறியதாவது:
தனுஷ் படங்கள¤ல் பழைய பாடல் ஒன்றின் ரீம¤க்ஸ் பாடல் இடம்பெறும். அந்த பாடல் ஹிட் ஆவதால் தொடர்ந்து, தனுஷ் படங்களில் ரீமிக்ஸ் பாடல் வைக்குமாறு ரசிகர்கள் கேட்கின்றனர். இதனால் ‘படிக்காதவன்’ படத்திலும் அது போல ஒரு பாடலை தேடி வருகிறோம்.
ஆனால் இதுவரை படத்துக்கு ஏற்ற பாடல் கிடைக்கவில்லை.
இப்படம் தனுஷ§க்கு காமெடி நன்றாக வரும் என நிரூபிக்கும். இதில் தனுஷின் அப்பாவாக பிரதாப் போத்தன் நடித்துள்ளார். இருவரும் வரும் காட்சிகளில் காமெடி அதிகமாக இருக்கும். அப்பாவை ஹியூமர் டார்ச்சர் செய்யும் வேடத்தில் தனுஷ் நடித்திருக்கிறார்.
படத்தில் விவேக்கின் காமெடியும் ஸ்பெஷல¢. எனது மற்ற படங்களின் பாணியில் இதிலும் காமெடியுடன் ஆக்ஷன் முக்கியமாக இருக்கும். படத்தில் வில்லனாக சுமன் நடித்துள்ளார்.
இவ்வாறு சுராஜ் கூறினார்.