header Home | Set as homepage | Add to favorites |
Search the Site   Advanced Search »

Sections
Archive
Su Mo Tu We Th Fr Sa
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31

Newsletter
Subscribe to newsletter:



email Email to a friend | print Print version | comment Comments (0 posted)

‘குசேலன்’ விழா: பசுபதி, நயன்தாரா, மீனா புறக்கணிப்பு

By on July 02,2008

image

 

சென்னையில் நடந்த 'குசேலன்' பாடல் வெளியீட்டு விழாவை நயன்தாரா, பசுபதி, மீனா புறக்கணித்ததாக பரபரப்பு ஏற்பட்டது.

ரஜினி நடிப்பில் கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் 'குசேலன¢'. இதில் தனக்கு கவுரவ வேடம்தான் என ஏற்கெனவே ரஜினி கூறியிருந்தார். படத்தின் ஹீரோ பசுபதிதான். அவருக்கு ஜோடியான மீனாதான் பட ஹீரோயின். நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. விழாவுக்கு பட ஹீரோவான பசுபதி, ஹீரோயின் மீனா மற்றும் நயன்தாரா ஆகிய மூவரும் வரவில்லை. விழா நடக்கும் இடத்தில் இருந்த விளம்பரங்களிலும் படத்தின் மற்ற விளம்பரங்களிலும் இந்த மூவரின் படங்கள் இடம்பெறவில்லை.

விழாவில் பேசிய இயக்குனர் பி. வாசு, தயாரிப்பாளர்கள் பாலசந்தர், செவன் ஆர்ட்ஸ் விஜயகுமார் உட்பட யாருமே பசுபதி பற்றியோ மீனா, நயன்தாரா பற்றியோ பேசவே இல்லை. 'விளம்பரங்களில் தங்களை புறக்கணித்ததால் அவர்கள் விழாவை புறக்கணித்திருப்பதாக' கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவித்தன.

'குசேலன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பசுபதி வேடத்தில் நடித்திருப்பவர் ஜெகபதி பாபு.  'அவரை விழா மேடையில் அமர வைத்து, கவுரவித்தனர். அவரது வேடத்தை தமிழில் ஏற்ற பசுபதியை கண்டுகொள்ளாதது ஏன் என புரியவில¢லை' என விழாவுக்கு வந்திருந்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

விழாவுக்கு வராதது குறித்து பசுபதியிடம் கேட்டபோது, 'வெடிகுண்டு முருகேசன் படத்தின் ஷ¨ட்டிங் திண்டுக்கல்லில் நடக்கிறது. அதனால் விழாவுக்கு வரமுடியவில்லை' என்றார். இதே போன்று 'ஏகன்' பட ஷ¨ட்டிங் காரணமாக நயன்தாரா வரவில்லை என அவரது தரப்பினர் கூறினர்.

kuselan

மீனா ஐதராபாத்தில் ஷ¨ட்டிங்கில் இருந்ததால் வரவில்லை என்று கூறப்பட்டது. விழாவுக்கு வந்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர் வடிவேலு உட்பட பலர் பிசியானவர்கள்தான்.

அவர்களும் பணிகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி வ¤ழாவுக்கு வந்திருந்தனர். ஆனால் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான பசுபதி, நயன்தாரா, மீனா வராதது சினிமா வட்டாரத¢தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.  

 

Your Ad Here

2011 times read

Did you enjoy this article?

1 2 3 4 5 Rating: 3.33Rating: 3.33Rating: 3.33Rating: 3.33 (total 6 votes)
comment Comments (0 posted)
Most Popular
Most Commented
Most E-mailed