விக்ரம் ஜோடியாகிறார் இலியானா
Related news
விக்ரம் ஜோடியாக தமிழில் நடிக்கிறார் இலியானா. ஸ்ரீ ராஜகாளியம்மன் மீடியாஸ் சார்பில் மோகன் நடராஜன் தயாரிக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார். |
கே.எஸ். ரவிக்குமார் இயக்குகிறார். இதில் விக்ரமுக்கு இரட்டை வேடம்.ஒரு விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை பேசி வருகின்றனர். இன்னொரு விக்ரமுக்கு ஜோடியாக இலியானா நடிக்க உள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணியில் இருப்பவர் இலியானா. 'போக்கிரி', 'வில்லு' படங்களில் அவரை விஜய் ஜோடியாக நடிக்க வைக்க முயற்சி நடந்தது. ஆனால் அதிக சம்பளம் கேட்டதால் அவரை தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்யவில்லை. ஆயினும் தமிழில் அவரை நடிக்க வைக்கும் முயற்சி தொடர்ந்து கொண்டிருந்தது. இப்போது விக்ரம் ஜோடியாக நடிக்க இலியானா சம்மதித்துள்ளார். இதுகுறித்து இலியானா தரப்பில் கூறும்போது, 'இலியானா வெளிநாட்டில் உள¢ளார். ரவிக்குமார் படத்தில் நடிக்க அவர் சம்மதித்துள்ளார். ஆனால் படத்தின் ஷ¨ட்டிங் இப்போது இல்லை. தாமதம் ஆகும். அதனால் கால்ஷீட் எதுவும் ஒதுக்கவில்லை. முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கவும் பேசப்பட்டது. அது குறித்து முடிவு செய்யவில்லை' என்றனர்.
|
482 times read
|
|
Did you enjoy this article?
|
Comments (0 posted)
|
|