| தசாவதாரம் படத்திற்குப் பிறகு தனது சம்பளத்தை லம்ப்பாக ஏற்றிவிட்டார் அசின் குசேலன் படத்தில் செண்டிமெண்ட் சீன்களை அள்ளி இறைத்துள்ளார் பி.வாசு கந்தசாமி படத்துக்காக மெக்ஸிகோ பறந்துள்ளார் ஸ்ரேயா. ஷங்கர் தயாரிக்கும் அடுத்த படத்தில் முக்கியமான ரோலில் மீராஜாஸ்மின் நடிக்கிறார் சிவாஜி பட செண்டிமெண்ட் போலவே ரோபோ ஷூட்டிங் செல்வதற்கு முன்பு, திருப்பதி செல்ல முடிவு செய்துள்ளார், ரஜினி முதல்வர் கருணாநிதி வசனத்தில் கமல் நடிக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம் தேசிய விருது, மாநில விருது, விஜய் டி.வி. விருது எதிலும் டைரக்டருக்கான விருது கிடைக்கவில்லையே என்று அப்செட்டில் இருக்கிறார் அமீர் ஒரே சமயத்தில் குசேலன், கிருஷ்ணலீலை, திருவண்ணாமலை படங்களைத் தயாரித்து வருகிறது கவிதாலயா நிறுவனம் ஜெயம் கொண்டான் படம் தவிர வேறு தமிழ் படம் பாவனா கையில் இல்லை விஜயகாந்த், விக்ரமன் இணையும் படத்துக்கான டிஸ்கஷன் தீவிரமாக நடந்து வருகிறது படிக்கப் போறேன்னு சொல்வதால் நவ்யா நாயருக்கு படவாய்ப்பு பறிபோகிறது தனது சம்பளத்தை வெயிட்டாக உயர்த்தியுள்ளார் ஸ்ரீகாந்த் தேவா ஜகன் மோகினி படத்துக்காக மதுரையில் டேரா போட்டுள்ள நமீதாவின் ஓட்டலைச் சுற்றி இளைஞர் கூட்டம் மொய்க்கிறது சம்பளம் எவ்வளவு ஜாஸ்தியாகக் கொடுத்தாலும், கதை பிடித்தால் மட்டுமே ஒப்புக்கொள்கிறார் நதியா
|