ஆர்யா ஜோடியாக 'நான் கடவுள்' படத்தில் நடித்து வரும் பூஜா,
அளித்த பேட்டி:
'நான் கடவுள்' எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. படத்தில் ஒவ்வொரு
காட்சியும் சுவாரஸ்யமாக இருக்கிறது. சவாலான கேரக்டர்.
இந்த படத்துக்கு பிறகு என்னுடைய இமேஜ் நிச்சயம் உயரும். 'நான் கடவுள்'
முடியும் வரை வேறெந்த படத்திலும் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக
இருக்கிறேன். மூன்று வாய்ப்புகள் வந்தன. அதை மறுத்து விட்டேன்.
நான் கடவுளில் நடிப்பதற்காக சிங்கள படம் ஒன்றிலிருந்தும் விலகினேன்.
அவர்களும் விட்டுக் கொடுத்தார்கள். அந்த நன்றிக்காக அதே நிறுவனத்துக்கு
அடுத்த சிங்கள படத்தில் நடித்துக் கொடுக்கிறேன். ஜூன் மாதம் படப்பிடிப்பு
தொடங்குகிறது. அதன் பிறகு தமிழில் நடிப்பேன்.
எனது பாட்டிக்கு உடல் நலமில்லாமல் இருப்பதால் அடிக்கடி இலங்கை
சென்று வந்தேன். அதனால் யாரும் என்னை தொடர்புகொள்ள முடியாமல்
இருந்தது. இதைவைத்து பூஜா திமிர் பிடித்தவள் என்று சிலர் புரளி
கிளப்புகிறார்கள்.
என்னை அறிந்தவர்களுக்கு நான் எவ்வளவு எளிமையானவள் என்பது
தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.