'ராமன் தேடிய சீதை'யில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் நவ்யா நாயர்.
அவர் அளித்த பேட்டி:
தமிழில் ‘எட்டப்பன்' படத்தில் நடித்து வருகிறேன். இது கமர்ஷியல்
படம். கிளாமராக நடித்திருக்கிறேன். ‘ராமன் தேடிய சீதை’யில் கவுரவ
வேடத்தில் நடிக்கிறேன்.
அந்தப் படத்தை தயாரிக்கும் மோசர்பேர் நிறுவனம் அடுத்து மீரா கதிரவன்
இயக்கத்தில் ‘அவள் பெயர் தமிழரசி' என்ற படத்தை தயாரிக்கிறது.
இதில் நான்தான் ஹீரோயின். மோசர்பேர் நிறுவனத்தார் கேட்டுக் கொண்டதால்
'ராமன் தேடிய சீதை'யில் கவுரவ வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
கன்னடத்தில் நான் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘தஜா' படம்
வெற்றியடைந்துள்ளது. மலையாள சினிமாவில் நினைத்ததையெல்லாம் சாதித்து,
எல்லோர் மனதிலும் இடம்பிடித்து விட்டேன். இந்த நிமிடமே சினிமாவை
விட்டு விலகினாலும் மலையாள சினிமாவில் என் பெயர் நிலைத்திருக்கும்.
அப்படி ஒரு வெற்றி தமிழில் கிடைக்கவில்லையே என்ற வருத்தம்
இருக்கிறது. அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.