கோலிவுட்டில் அஜீத் மற்றும் விஜய்க்கு மிகப் பெரிய பெயர் உண்டு.
2007 ஆம் வருடம் இருவருக்கும் வெற்றியையும் தோல்வியையும்
தந்தது என்றுதான் சொல்ல வேண்டும். பொங்கலுக்கு வெளியான
போக்கிரி படத்தின் மிகப் பெரிய வெற்றியோடு 2007ஆம் வருடத்துக்குள்
அடியெடுத்து வைத்த விஜய், தீபாவளிக்கு வெளியான அழகிய தமிழ்
மகனின் தோல்வியோடு 2008க்குள் அடி எடுத்து வைக்கின்றார்.
அதேபோல் 2006 இறுதியில் வரலாறு என்ற மெகா ஹிட் படத்தை
கொடுத்த அஜீத்துக்கு 2007ஆம் ஆண்டு பொங்கலுக்கு வந்த ஆழ்வார்
காலை வாரியது. அதன் பிறகு வெளிவந்த கிரீடம் மிகப் பெரிய வெற்றிப்
படமாக அமையாவிட்டாலும் நன்றாக ஒடியது. தற்பொழுது வெளியாகி
வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் பில்லா, ரஜினியின் சிவாஜி படம்
அளவுக்கு சாதிக்கும் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.
எனவே இருவருக்கும் இந்த ஆண்டு வெற்றி தோல்விகளை மாறி மாறி
கொடுத்துள்ளது என்பதே உண்மை.
(Posted by amir, August 7, 2008, 6:54 AM)