header Home | Set as homepage | Add to favorites |
Search the Site   Advanced Search »

Sections
Archive
Su Mo Tu We Th Fr Sa
123456
78910111213
14151617181920
21222324252627
28293031

Newsletter
Subscribe to newsletter:



email Email to a friend | print Print version | comment Comments (0 posted)

'நான் அப்படித்தான்' - அஜித் பேட்டி

By on June 09,2008

image

 

அப்படித்தான் என்றால் எப்படி?
 
மனதில் பட்டதை பளிச்சென்று சொல்வது. உள்ளே ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே வேறொன்றைச் சொல்லாதது.
 
உண்மையான அக்கறையோடு பேசுவது. நாம் பேசும்போது அவருக்கும் நமக்குமான இடைவெளியே இல்லாதது. இதெல்லாம் அஜித்திடம் எப்பொழுதும் இருப்பவை.

 

இதனாலேயே உலகப் புகழ்பெற்ற `கான்ஸ்' திரைப்பட விழாவில் `பில்லா' படமும் கலந்துகொண்டு திரையிடப்பட்டதைப் பற்றிக் கேட்டதும் `கான்ஸ்' திரைப்பட விழாவைப் பற்றி மிகவும் ஓபனாக, உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார் அஜித்.

``உலகம் முழுவதும் இருக்கிற திரைப்பட ஜாம்பவான்கள், ரசிகர்களுக்கு தீபாவளின்னா அது `கான்ஸ்' திரைப்பட விழாதான் பாஸ். அப்படியொரு அமர்க்களமான விழா அது. முன்பு கான்ஸ் திரைப்பட விழாவைப் பத்தி எனக்கு பெரிசா எதுவும் தெரியாது.
 
`பில்லா'வுக்காக அங்கே போனதும்தான் அதனோட அருமை தெரிஞ்சது. உண்மையிலேயே சிலிர்த் திருச்சு பாஸ். திரையிடப்படுற படம் முடிஞ்சதும் மக்கள் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டுறதைப் பார்க்கவே நாம கொடுத்து வைச்சிருக்கணும். அரை மணி நேரம் கூட எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவாங்க. சினிமா மேல அவ்வளவு மரியாதை இருக்கு.''

`கான்ஸ்' திரைப்பட விழாவில் சமீப காலமாக அதிகளவில் இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. ஆனால், விருதுகள் எதுவுமே வாங்கவில்லை என்கிறபோது இங்கு தேவையே இல்லாமல் கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட படம் என பில்டப்கள் கொடுக்கப்படுகிறதே. உண்மைதான் என்ன?

``கான்ஸ் திரைப்பட விழாவைப் பத்தி இங்கு மக்களுக்கு யாருமே முழுமையாக விளக்கிச் சொல்லாமல் விட்டது வருத்தமான விஷயம்தான். இந்த விழாவைப் பொறுத்தவரை மூணு வகை ஸ்கிரீனிங் இருக்கு. முதல்ல போட்டிக்குத் திரை யிடுகிற வகை, போட்டியில்லாமல் திரையிடுகிற வகை. கடைசியாக மார்க்கெட்டிங் ஸ்கிரீனிங்.

உலகம் முழுவதிலுமிருந்து இரண்டாயிரம் படங்களைத் தேர்ந்தெடுத்து அதிலிருந்து இருபத்தொரு படங்களை திரையிடுவதுதான் Competitive Screening. இதில் வெற்றி பெறுகிற படங்களுக்குத்தான் விருதுகள் வழங்குவாங்க.

அடுத்ததாக, Noncompetitive Screening. ஸ்பெஷலாக திரையிடப்படுகிற படங்களுக்கும் மரியாதை அதிகம். இந்த இரண்டிலும் திரையிடப்படுகிற படங்களோட இயக்குநர்கள், நடிகர், நடிகைகளுக்குத்தான் ரெட் கார்பெட் வரவேற்பு கொடுப்பாங்க.   இந்த இரண்டு ஸ்கிரீனிங் களுக்கும் பங்கு கொள்கிற படங்கள் முதல் முறையாக கான்ஸ் விழாவில்தான் திரையிடப்படு கிற படங்களாக இருக்கணும்.

அடுத்ததாக உலகம் முழுவதும் உள்ள சினிமா பிஸினெஸ், டிஸ்ட்ரிபியூட்டர்களுக்காக காண்பிப்பதுதான் மார்க் கெட்டிங் ஸ்கிரீனிங். இதுக்கு எந்த கண்டிஷனும் இல்லை. நம்ம படத்தை கான்ஸ் விழாவுல ஸ்கிரீன் பண்ண சில ஆயிரம் யூரோக்கள் பணம் கட்டவேண்டும். இந்த ஸ்கிரீனிங்கில் பல நாடுகளிலுள்ள டிஸ்ட்ரிபியூட்டர்கள் படம் பார்த்து, பிடித்திருந்தால் அவர்களுடைய நாட்டிலும் திரையிடுறாங்க. இதனால தமிழ் சினிமா மீது உலக நாடுகளின் கவனம் திரும்பியிருக்கு என்பது ரொம்ப சந்தோஷமான விஷயம்.''

ajith

அப்படியானால் `பில்லா' எந்த வகை ஸ்கிரீனிங்கில் திரையிடப்பட்டது?

``மார்க்கெட்டிங் ஸ்கிரீனிங்கில் தான் பாஸ். இந்த உண்மையை நான் மறைக்கணும்னு நினைச்சதே இல்லை. மற்ற படங்களைப் போல மார்க்கெட்டிங் ஸ்கிரீனிங்கில் `பில்லா' திரையிடப்பட்டாலும் ஒரு சின்ன சந்தோஷம் எங்களுக்கு இருக்கு. பொதுவாக கொரியா, சீனா உள்பட ஆசிய நாடுகளின் படங்கள் என்றால் நூறுபேர் மட்டுமே பார்க்கும் வசதியுள்ள ஸ்கிரீனிங்கில் அதிக பட்சம் பத்துப் பேர்தான் பார்ப்பார்கள். ஆனால், பில்லாவைப் பார்க்க இதுவரையிலும் அதிக பட்சமாக நாற்பது பேருக்குமேல் வந்தது எங்களுக்கே ஆச்சர்யமாக இருந்தது.''

உலக சினிமாவோடு போட்டி போட்டு Competitive Screening நம்முடைய தமிழ்ப் படங்களும் போட்டியிடும் நிலை இன்னும் வரவில்லையே. அந்தக் குறையைப் போக்கும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? 

``நிச்சயம் இருக்கு. ஆனால் அதுக்கான காலம், வாய்ப்புகள் வரும்போது நான் அதைச் செய்துகாட்டத் தயாராக இருக்கேன்.

நம்மாலும் முடியும் பாஸ். தமிழ் சினிமா மூலம் விருது வாங்க சீக்கிரமே நாமும் ரெட்கார்பெட் வரவேற்போடு போவோம். ஸோ டோன்ட் வொர்ரி'' என்று தனது ஃபேவரிட் புன்னகையைத் தவழ விடுகிறார் அஜித்..

kumudam.com

 

 

Your Ad Here

4732 times read

Did you enjoy this article?

1 2 3 4 5 Rating: 4.65Rating: 4.65Rating: 4.65Rating: 4.65Rating: 4.65 (total 66 votes)
comment Comments (0 posted)
Most Popular
Most Commented
Most E-mailed