header Home | Set as homepage | Add to favorites |
Search the Site   Advanced Search »

Sections
Archive
Su Mo Tu We Th Fr Sa
123456
78910111213
14151617181920
21222324252627
28293031

Newsletter
Subscribe to newsletter:



email Email to a friend | print Print version | comment Comments (0 posted)

எல்லோரையும் கவனிக்கிறேன் - த்ரிஷா பேட்டி

By on March 14,2008

image

 

செனடாப் சாலையில் இருக்கும் த்ரிஷாவின் வீடுகூட அத்தனை அழகாக
இருக்கிறது! ''நேத்துதான் 'லேசா லேசா' படத்துல அறிமுகமான மாதிரி
இருக்கு.அந்தப் படத்துக்கான விமர்சனங்களில் என்னைப்பத்தி வந்த
வரிகளும் இன்னும் ஞாபகம் இருக்கு! இன்னிக்கு த்ரிஷான்னா ஒரு நல்ல
நடிகைனுபேர் சொல்லும்படியான படங்கள் பண்ணி யிருக்கேன். ஆனா,
எனக்கு இதெல்லாம் போதாது. இன்னும் பெரிசா ஏதாவது சாதிக்கணும்.
அதை நானே ரசிச்சு அனுபவிக்கணும்!''

''என்ன சொல்லுது 'குருவி'?''

''இப்போதான் விஜய்யோடு மலேசியாவில் செமத்தியான டூயட் முடிஞ்சுது.
இன்னும் அந்த டான்ஸ் மூவ்மென்ட்ஸ் உள்ளுக்குள்ளே ஓடிக்கிட்டே இருக்கு.
எனக்கு தரணி ரொம்ப ஃப்ரெண்ட். விஜய் பத்திச் சொல்லவே வேண்டாம்.
அப்படியே திரும்பவும் 'கில்லி' ஸ்பாட்டுக்குப் போயிட்ட மாதிரி ஒரு ஃபீலிங்!

எங்க கில்லி கேங்க்ல  இப்ப புரொடியூஸர் உதயநிதி சார் புது மெம்பர். 'தான்
எவ்ளோ பெரிய வி.ஐ.பி'ங்கிற பந்தா துளிகூடக் கிடையாது அவர்கிட்டே!
சகஜமா பழகுவார். எந்த அதிகார தோரணையும் கிடையாது. ரொம்ப ரொம்ப
எளிமையானவர். திட்டம் போட்டுப் பரபரப்பாகவும், அதேசமயம் ஜாலியாகவும்
பறந்துகிட்டு இருக்கு 'குருவி'.''

 

 

 

''தெலுங்குல அதிரடியான ஆட்டம் பாட்டம், கிளாமர்னு கலக்குறீங்க. 'அபியும்
நானும்'னு தமிழ்ல அழகான கேரக்டர். இனிமே, த்ரிஷா இங்கே இப்படித்தானா..?''

trisha

'' 'மொழி' பார்த்துட்டு இயக்குநர் ராதாமோகன் மேல் அதிகப்படியான
மரியாதை வந்துச்சு. ஜோதிகாவுக்கு அந்த ஒரே படத்தில் கிடைச்ச பேரே
போதும், காலாகாலத்துக்கும் பெருமையா சொல்லிக்க முடியும். 'அபியும்
நானும்' படத்துக் காக ராதாமோகன் சொன்ன கதை என்னை மிரளவெச்சுது.
அந்தப் படத்துல நடிக்க ஆரம் பிச்சதுமே எனக்கு வேற கலர் கிடைச்ச
மாதிரி இருக்கு. 'நாங்க அடுத்துபண்ணப்போற படத்துல ஹீரோயினுக்கு
ரொம்ப முக்கியத்துவம் இருக்கு. நீங்க பண்ணினா ரொம்ப நல்லாயிருக்கும்'னு
நிறைய போன் கால்ஸ் வருது. ஆனா, அபி மாதிரி சாயல் உள்ள வேறு படத்தில்
நடிக்க நான் ஆசைப்படலை. 'அட! இது நம்ம பொண்ணுடா!'னு தமிழ்,
தெலுங்கு இரண்டிலும் எனக்கு நல்ல பேர் இருக்கு. எனக்கு அது போதும்.
மொழிகளைக் கடந்ததுதான் என் சந்தோஷம்!''

trisha

''பில்லா'வுக்குப் பிறகு நயன்தாராதான் இப்ப தமிழ்ல ஹாட்! கவனிக்கிறீங்களா..?''

''நயன்தாரா மட்டுமில்லை... எல்லோரையும் கவனிக்கிறேன். ஒரே படத்துல
வந்து போற புதுமுகத்தைப் பத்திக்கூட விசாரிச்சுக்குவேன். சினிமாவுக்கு
வந்து ஆறு வருஷம் ஆச்சு. இந்தக் கடலில் நீந்தி, இன்னும் மூழ்காமல்
மிதந்துக்கிட்டே இருக்கேன்னா நிறைய உழைப்பும், கொஞ்சம் அதிர்ஷ்டமும்தான்
காரணம். என்னைவிட அழகான, புத்திசாலியான எத்தனையோ நடிகைகள்
இன்னும் பெரிய இடத்துக்கு வர முடியாமல் தவிக்கிறதைப் பார்த்திருக்கேன்.
அதனால இப்ப எனக்குக் கிடைச்சிருக்கிற இந்த உயரத்தை இழக்காமல்
இருக்க என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும்!''

trisha_3 

''மனம் திறந்து சொல்லுங்க, உங்களுக்குச் சரியான ஜோடி யாரு சினிமாவில்?''

''ஒரு சமயம் சித்தார்த் தான் 'பெஸ்ட்'னு சொன்னாங்க. 'சாமி', 'பீமா' பார்த்துட்டு
சாமிதான் மாமிக்கு ஏத்த ஜோடின்னு சொன் னாங்க. 'அக்கம் பக்கம் யாருமில்லா
பூலோகம்' பாட்டுல எனக்கும் அஜீத்துக்கும் அத்தனை கெமிஸ்ட்ரினு சொன்னாங்க.
எனக்கும் விஜய்க்கும் ஆட்டத்தில் பொறி பறக்கும் கிறது எல்லாருக்குமே தெரியும்.
மத்தபடி, உங்க கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியலை. நீங்க என்ன
சொல்றீங்களோ அதை அப்படியே நான் ஏத்துக்கிறேன். சரியா?''

அப்பாவியாகக் கேட்குது பொண்ணு!

 

vikatan.com

Your Ad Here

2362 times read

Did you enjoy this article?

1 2 3 4 5 Rating: 3.67Rating: 3.67Rating: 3.67Rating: 3.67 (total 15 votes)
comment Comments (0 posted)
Most Popular
Most Commented
Most E-mailed